கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்து கழகத்தின் மூலம் 800 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கரோனா வைரஸ் அச்சம் காரணமாக பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி இருப்பதால் பேருந்துகளை பயன்படுத்துவது வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல குமரியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு நாள்தோறும் 42 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 10 பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் குமரி மாவட்ட போக்குவரத்துக் கழகத்துக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து போக்குவரத்துக் கழக அலுவலர் ஒருவர் கூறியதாவது, "குமரி மாவட்டத்தில் உள்ள அரசுப் போக்குவரத்து கழகத்துக்கு நாள்தோறும் ரூ. 85 லட்சம் வருமானம் கிடைத்து வந்தது. கரோனா வைரஸ் அச்சம் காரணமாக பொதுமக்கள் பேருந்துகளை பெருமளவில் தவிர்த்து வருகின்றனர். இதனால் போக்குவரத்துத் துறையில் வருமானம் குறைந்துள்ளது", என்றார்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பைச் சீர் செய்ய 20 ஆயிரம் கோடி ரூபாய்! - கேரள அரசு அறிவிப்பு