கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் கோடை விடுமுறை இன்றுடன் முடிவடைந்து நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள தெற்காசியாவிலேயே மிக உயரமான 1,240 அடி நீளம், 7.5 அடி அகலம், 115 அடி உயரமும் கொண்ட மாத்தூர் தொட்டிப் பாலத்தை காண சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் குவிந்தனர்.
1971 ஆம் ஆண்டு இரண்டு மலை குன்றுகளுக்கிடையே விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக கட்டப்பட்டது இந்த தொட்டிப் பாலம். இன்று இங்கு வந்த சுற்றுலாப் பயணிகள், அதன் பக்கவாட்டு நடைபாதை வழியாக ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கம் வரை 1,240 அடி தூரம் நீண்ட வரிசையில் நடந்து சென்றனர். அப்படியே இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை ரசித்தனர்.
மேலும் பாலத்தின் கீழ் பகுதியில் ஓடும் ஆற்றில் குடும்பத்தோடு ஆனந்த குளியலிட்டனர். அங்குள்ள சிறுவர் பூங்காவில் விளையாடி மகிழ்ச்சியோடு திரும்பினர்.
இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவில் இருந்த ஜோடி தற்கொலை