ETV Bharat / state

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி - ue to the release of water in the dams

குமரி குற்றாலம் என்றழைக்கபடும் கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் விடுமுறையையொட்டி சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

Etv Bharatதிற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

author img

By

Published : Sep 18, 2022, 8:42 PM IST

கன்னியாகுமரி: முக்கிய சுற்றுலாத் தலங்களுள் முக்கியத்துவம் வாய்ந்தது திற்பரப்பு அருவி இடமாகும். இது குமரி குற்றாலம் என்றழைக்கபடும் திற்பரப்பு அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுவது வழக்கம். இதனால் இங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் வார விடுமுறையையொட்டி திற்பரப்பு அருவியில் இன்று (செப்- 18) சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணபட்டது. கடந்த சில நாள்களாக கனமழை மற்றும் அணைகளில் நீர்திறப்பு காரணமாக அருவியில் அதிகளவில் தண்ணீர் கொட்டியது.

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தற்போது மழை குறைந்ததால் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்து காணபட்டது. எனினும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து குடும்பத்துடன் குளித்தனர். இதேபோல் அருவி வளாகத்திலுள்ள சிறுவர் பூங்காக்களிலும் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர். சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால் திற்பரப்பு அருவி களைகட்டியது.

இதையும் படிங்க:கோபிசெட்டிபாளையத்தில் முதல் போக நெல் அறுவடைப்பணிகள் தீவிரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.