ETV Bharat / state

நூற்றுக்கணக்கான முட்டையிட்ட ‘ஆலிவ் ரிட்லி’ கடல் ஆமை! - நூற்றுக்கணக்கான முட்டையிட்டது

கன்னியாகுமரி: ராஜாக்கமங்கலம் கடற்கரை பகுதியில் கடல் ஆமை இட்டுச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை வனத்துறையினர் ஆமை முட்டை பொறிப்பகத்தில் சேகரித்து வைத்தனர்.

‘ஆலிவ் ரிட்லி’ கடல் ஆமை
‘ஆலிவ் ரிட்லி’ கடல் ஆமை
author img

By

Published : Mar 16, 2020, 10:17 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே கடற்கரை பகுதியில் இன்று கடல் ஆமை நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை இட்டுச் சென்றது. இதனை வனத்துறையினரால் ஆமை முட்டை பொறிப்பகத்தில் சேகரித்து வைக்கப்பட்டது. மேலும் இன்று பொறித்த ஆமை குஞ்சுகள் இன்றே கடலில் விடப்பட்டன.

கடலில் தூய்மை பணியை கடல் ஆமை இனம் செய்து வருகிறது. இதனால் கடல் வளம் பாதுகாக்கப்பட்டு மீன், இறால் உள்ளிட்ட இனங்கள் பாதுகாக்கப்படுகிறது. தற்போது இந்த இனம் அழிவின் விளிம்பில் உள்ளது.

‘ஆலிவ் ரிட்லி’ கடல் ஆமை

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதியில் அழிவின் விளிம்பில் உள்ள ‘ஆலிவ் ரிட்லி’ வகை கடல் ஆமை இனம் அதிக அளவில் முட்டையிட்டு செல்கிறது. ஆண்டு தோறும் டிசம்பர் முதல் மார்ச் வரை இதன் இனப்பெருக்கக் காலமாகும். இதனை சமூக விரோதிகள் பலர் வேட்டையாடுகின்றனர்.

இந்நிலையில் வனத்துறையினர் அழிந்து வரும் ஆமை இனத்தை பாதுகாக்க ராஜாக்கமங்கலம் அருகே தென்பால் கடற்கரை பகுதியில் ஆமை முட்டை பொரிப்பகம் வைத்து முட்டைகளை சேகரித்து, குஞ்சுகளை பொரிக்க வைத்து குஞ்சுகளைக் கடலில் விடுகின்றனர்.

இன்று இப்பகுதியில் கடல் ஆமைகள் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை விட்டு கடலுக்குள் சென்றிருந்தது. அதனைக் கண்டறிந்து வனத்துறையினர் பத்திரமாகச் சேகரித்தனர். மேலும் ஏற்கனவே சேகரித்த முட்டைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குஞ்சுகள் இன்று பொரித்து இருந்தன. அதனைக் கண்டறிந்த வனத்துறையினர் கடலில் பத்திரமாக விட்டனர்.

ஒக்கி புயலுக்கு முன் ஆண்டுக்கு சுமார் 13,500 முட்டைகள் சேகரிக்கப்பட்டன. ஆனால் இந்த ஆண்டில் சுமார் 2,900 முட்டைகள் மட்டுமே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனா எதிரொலி: சுத்தம் செய்யும் பணியில் இறங்கிய தீபிகா படுகோனே!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.