ETV Bharat / state

1,200 கோடி செலவில் கழிவறைகள் கட்டப்படும்  - செங்கோட்டையன் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

கன்னியாகுமரி: தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 1,200 கோடி ரூபாய் செலவில் கழிவறைகள் கட்டப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டை அறிவிப்பு
author img

By

Published : Jul 14, 2019, 8:37 AM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சிக்காக வருகைதந்த தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் உள்ளிட்ட உயர் அலுவலர்களும் அதிமுக நிர்வாகிகளும் திரளாகக் கலந்துகொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது, "இந்தியாவே வியக்கும் வகையில் தமிழ்நாடு பிற மாநிலங்களைக் காட்டிலும் அனைத்துத் துறைகளிலும் முன்னோடியாகத் திகழ்கிறது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

குறிப்பாக எல்கேஜி, யுகேஜி கொண்டுவந்து தமிழோடு ஆங்கிலத்தை எளிதாக கற்றுக் கொள்ளும் வகையில் கற்பிக்கப்படுகிறது. 1,200 கோடி ரூபாய் மதிப்பில் கழிவறைகள் அமைக்கப்படும். அடுத்தக் கல்வி ஆண்டில் 5 லட்சம் மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்க நாங்கள் செயல்பட்டுவருகிறோம்.

முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாத வகையில் 54 லட்சத்து 62 ஆயிரம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வித் துறையில் எந்தக் குறைபாடும் இல்லை. அவ்வாறு இருக்கும் குறைபாடுகளைச் சரி செய்துவருகிறோம்.

நீட் தேர்வில் 100 விழுக்காடு விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு. தமிழ்நாட்டில் அரசு அனுமதி இல்லாமல் இயங்கும் பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. ஆனால் சில பள்ளி நிர்வாகம் நீதிமன்றத்தை நாடுகிறது.

1,200 கோடி செலவில் கழிவறைகள் அமைக்கப்படும்

ஆனால் நீதிமன்றம் கல்வித் துறைக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்குகிறது. தற்போது உள்ள பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள் அமைந்துள்ளன. இதனை உத்தரப்பிரதேச துணை முதலமைச்சரும் வரவேற்றுள்ளார். இந்தப் பாடத்திட்டத்தைத் தயாரித்த கல்வியாளர்களை அந்த மாநிலத்திலும் கேட்டுள்ளார்கள்" எனத் தெரிவித்தார்.

Intro:தமிழகம் முழுவதும் அரசு பள்ளிக்கூடங்களில் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் கழிவறைகள். கன்னியாகுமரியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.

Body:தமிழகம் முழுவதும் அரசு பள்ளிக்கூடங்களில் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் கழிவறைகள். கன்னியாகுமரியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.

தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் 1, 200 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கழிவறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சிக்காக வருகை தந்த தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு கன்னியாகுமரியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மூ வடநேரே எஸ்பி ஸ்ரீநாத் உட்பட்ட அதிமுக மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் திரளாக கலந்து சிறப்பான வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:- இந்தியாவே வியக்கும் வகையில் தமிழகம் பிற மாநிலங்களை காட்டிலும் அனைத்து துறைகளிலும் முன்னோடியாக திகழ்கிறது .மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது .குறிப்பாக எல்கேஜி யுகேஜி கொண்டுவந்து தமிழோடு ஆங்கிலத்தை எளிதாக கற்றுக் கொள்ளும் வகையில் கற்பிக்கப்படுகிறது. அடுத்த கல்வி ஆண்டு முதல் மாணவர்களுக்கு ஷூ மற்றும் சாக்ஸ் வழங்கப்படும் .எல்கேஜி யுகேஜி வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு எப்படி சத்துணவு வழங்குவது என்று தமிழக முதல்வர் ஆலோசனை செய்து வருகிறார் .மேலும் தனியார் பள்ளிகளை காட்டிலும் சிறந்த முறையில் சீருடை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .இதனால் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 2 லட்சம் மாணவர்கள் அதிகமாக அரசு பள்ளிக்கூடங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். அடுத்த கல்வி ஆண்டில் 5 லட்சம் மாணவர்களை அரசு பள்ளிக்கூடத்தில் சேர்க்க நாங்கள் செயல்பட்டு வருகிறோம். தமிழக முதல்வராக அம்மா இருந்தபோது இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாத வகையில் 54 லட்சத்து 62 ஆயிரம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டு உள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் எந்த குறைபாடும் இல்லை. அவ்வாறு இருக்கும் குறைபாடுகளை சரி செய்து வருகிறோம் .தமிழகத்தில் எந்த பள்ளியும் மூடும் நிலையில் இல்லை. அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு படிக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி பற்றி பாடத்திட்டத்தில் உள்ள குறைபாடுகள் அடுத்த கல்வி ஆண்டில் முழுமையாக சரிசெய்யப்படும். நீட் தேர்வில் 100 சதவீத விளக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலை பாடு. தமிழகத்தில் அரசு அனுமதி இல்லாமல் இயங்கும் பள்ளிகளை மூட நடவடிக்கை எடுத்து வருகிறது .ஆனால் சில பள்ளி நிர்வாகம் நீதிமன்றத்தை நாடுகிறது. ஆனால் நீதிமன்றம் கல்வித் துறைக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குகிறது. தற்போது உள்ள பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள் அமைந்துள்ளது. இதனை உத்திரப்பிரதேச துணை முதல்வரும் வரவேற்றுள்ளார் .இந்த பாடத்திட்டத்தை தயாரித்த கல்வியாளர்களை அந்த மாநிலத்திலும் கேட்டுள்ளார்கள் இவ்வாறு அவர் கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.