கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் அருகே திக்குறிச்சி பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலர் வேனில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று காலை பள்ளியில் படிக்கும் மாணவர்களை அழைத்து வருவதற்காக வேன் புறப்பட்டு சென்றது.
மாணவர்களுடன் திரும்பி வரும்போது இராஜாக்கமங்கலம் அடுத்த அளத்தங்கரை உப்பளத்தில் எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு வழிவிட ஓட்டுனர் வாகனத்தை சாலை ஓரமாக இயக்கியுள்ளார். அப்போது வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த உப்பளப் பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது.
இந்த வாகனத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த விபத்தில் 5 மாணவர்கள் காயமடைந்து அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து இராஜாக்கமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு: சிபிசிஐடி விசாரணை