ETV Bharat / state

'நன்மை செய்ய வெற்றி பெற்றிருக்கிறேன்' -வசந்தகுமார் எம்.பி - kanniyakumari

கன்னியாகுமரி: மக்களுக்கு நன்மை செய்ய ஆண்டவன் என்னை வெற்றி பெறச் செய்திருக்கிறார் என வசந்தகுமார் எம்.பி தெரிவித்துள்ளார்.

வசந்தகுமார்
author img

By

Published : Jun 22, 2019, 1:09 PM IST

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார் எம்பி வெற்றி பெற்றார். இதனையடுத்து வாக்களித்தவர்களுக்கும், வெற்றிக்காக உழைத்த கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்க பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்நிகழ்ச்சி சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயில் எதிரேயிருந்து தொடங்கியது. இதில் திமுக கூட்டணிக் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் வசந்தகுமார் எம்.பி பேசுகையில், ”மக்களுக்கு நன்மை செய்ய ஆண்டவன் என்னை வெற்றி பெறச் செய்திருக்கிறார். ஏற்கெனவே இரண்டு முறை நான் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்று மக்களுக்கு சேவை செய்துள்ளேன். மக்களுக்கு நன்மை செய்ய வசந்தகுமாரால் முடியுமா என்று கேட்கிறார்கள். கடவுளின் அருளாலும், காங்கிரஸின் ஆதரவாலும் கூட்டணிக் கட்சிகளின் உறுதுணையோடும் மக்களை திருப்திப்படுத்துவேன் என்று உறுதியளிக்கிறேன்” என்றார்.

TN_KNK_01_22_VASANTHAKUMAR MP_THANKS_SCRIPT_TN10005 எஸ்.சுதன்மணி,கன்னியாகுமரி மக்களுக்கு நன்மை செய்ய ஆண்டவன் என்னை வெற்றி பெற செய்திருக்கிறார். ஏற்கனவே இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவை செய்துள்ளேன் என்று நன்றி தெரிவிக்கும் பிரச்சாரப்பயணத்தில் வசந்தகுமார் எம்பி பேச்சு. பாராளுமன்ற உறுப்பினராக வசந்தகுமார் எம்பி வெற்றி பெற்று கன்னியாகுமரி பாராளுமன்ற வாக்காளர்கள், வெற்றிக்காக உழைத்த கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நன்றி தெரிவிக்கும் வாகன பிரச்சாரம் நடைபெற்றது. இதன் துவக்க நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோவில் முன்பிருந்து துவக்கப்பட்டது. இதில் திமுக கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வசந்தகுமார் எம்பி பேசியதாவது: மக்களுக்கு நன்மை செய்ய ஆண்டவன் என்னை வெற்றி பெற செய்திருக்கிறார். ஏற்கனவே இரண்டு முறை நான் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று மக்களுக்கு சேவை செய்துள்ளேன். வசந்தகுமாரால் முடியுமா என்று கேட்கிறார்கள்……ஆண்டவன் அருளாலும் இந்திய தேசிய காங்கிரஸின் ஆதரவாலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவாலும் இந்த மக்களை திருப்திபடுத்துவேன் என்று ஆண்டவன் சந்நிதி முன்பிருந்து உறுதியளிக்கிறேன் என்று அவர் கூறினார். பின்னர் வாக்காளர்களுக்கு திறந்த வாகனத்தில் நன்றி தெரிவித்தவாறே அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார். விஷுவல் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோவில் முன் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் பிரச்சார பயணம்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.