ETV Bharat / state

"சனாதனத்தால் வெற்றி கிடைத்தது"- சொல்கிறார் அண்ணாமலை! - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

Annamalai about 4 state election results: மோடியின் கேரன்டியும், சனாதன பிரச்சாரமும் தான் வடமாநில தேர்தல்களில் பாஜகவிற்கு வெற்றி பெற்றுத்தந்துள்ளதாக, அக்கட்சியில் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை கன்னியாகுமரியில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

4 மாநில குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2023, 3:55 PM IST

சனாதனத்தால் வெற்றி கிடைத்தது - அண்ணாமலை

கன்னியாகுமரி: நேற்று (டிச.3) வெளியான நான்கு மாநில தேர்தல் முடிவுகள் குறித்து கன்னியாகுமரி மாவட்ட பாஜக அலுவலகத்தில் வைத்து, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "பாஜகவுக்கு இன்று (நேற்று) அற்புதமான நாள் இன்று. 5 மாநிலத்தில் தேர்தல்களில் 4 மாநில தேர்தலில் முடிவுகள் வந்துள்ளன.

அதில் மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று வரலாறு படைத்திருக்கிறது. குறிப்பாக தெலுங்கானாவிலும் கட்சியாகப் பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. அதேபோல், மத்தியப் பிரதேசத்தில் 166 எம்.எல்.ஏ-க்களுடன் வெற்றி பெற்றுள்ளோம். 2003-ல் இருந்தே ஆட்சி செய்து வருகிறோம். இடையில் 15 மாதங்கள் காங்கிரஸ் ஆட்சி இருந்தது.

சத்தீஸ்கரில் கடந்த முறை பாஜகவின் 15 எம்.எல்.ஏ-க்கள் வெற்றி பெற்றிருந்தார்கள். தற்போது, 56 எம்.எல்.ஏ-க்களுடன் ஆட்சி அமைக்கிறோம். ராஜஸ்தானைப் பொருத்தவரை, 115 எம்.எல் ஏ-க்களுடன் ஆட்சி அமைக்கிறோம். தெலங்கானாவில் 2018ஆம் ஆண்டு ஒரு எம்.எல்.ஏ இருந்த நிலையில், தற்போது 8 எம்.எல்.ஏ-க்கள் வெற்றி பெற்று உள்ளார்கள்.

இது 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் தான். 'இந்தியா' கூட்டணிக்குப் பிறகு நடந்த முதல் தேர்தல் இது. அவர்கள் தேர்தலின் போது ஒ.பி.சி சமூகத்துக்கு முன்னுரிமை இல்லை, இலவச திட்டங்கள் என்பது போன்ற பல பிரசாரங்களை காங்கிரஸ் கட்சி மக்களிடம் முன் வைத்தனர்.

ஆனால், அதை எல்லாம் இந்த மாநிலங்களில் முதலமச்சர் வேட்பாளரை முன்னிலை படுத்தாமல், கட்சியை மட்டும் முன்னிலைப்படுத்தி, பிரதமர் மோடியின் கேரன்டி வாக்குறுதி மூலம் வெற்றி பெற்று உள்ளோம். குறிப்பாக தெலங்கானாவில் கம்மாரெட்டி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ், பி.ஆர்.எஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர்களை தோர்கடித்து உள்ளோம்.

தெலங்கானாவில் பாஜக 8 இடத்தில் வென்றிருந்தாலும் காங்கிரஸ், பி.ஆர்.எஸ் கட்சிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை தீர்மானித்தனர். இது கட்சிக்கு இரண்டாம் கட்ட வளர்ச்சி ஆகும். மேலும், 2028 தேர்தலில் தெலங்கானாவில் பாஜக ஆட்சி அமைக்கும்" என்று தெரிவித்தார்.

சனாதன பிரச்சாரமே கைகொடுத்தது: "சனாதனம் குறித்த பிரசாரம் வட மாநிலத்தில் எடுபட்டதாகச் சொல்கிறார்கள். ஆட்சி போனாலும் பரவாயில்லை சனாதன தர்மத்தை ஒழிப்பது தான் முக்கியம் என உதயநிதி கூறினார். மோடி கேரன்டியும், சனாதன பிரசாரமும் வடமாநில தேர்தலில் பா.ஜ.க-வுக்கு வெற்றியை கொடுத்துள்ளன.

2018ஆம் ஆண்டில் ஒரு எம்.எல்.ஏ இருந்தார், 2019ஆம் ஆண்டில் 4 எம்.பி-க்கள் இருந்தனர். இப்போது 8 எம்.எல்.ஏ வெற்றி பெற்றுள்ளனர். தெலுங்கானாவில் 2028ஆம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க ஆட்சிக்கு வரும். 1998ஆம் ஆண்டு என்.டி.ஏ கூட்டணி ஆரம்பித்தார்கள்.

அந்தக் கூட்டணி அப்படியே தான் உள்ளது. மோடியை பிரதமராக ஏற்றுக் கொண்டு வர கூடியவர்கள் வரலாம். குடும்ப அரசியலுக்கு எச்சரிக்கை மணி அடித்து உள்ளது இந்த தேர்தல் முடிவு. மக்களை ஒரு முறை இரண்டு முறை பொய் சொல்லி ஏமாற்றலாம் எப்போதும் ஏமாற்ற முடியாது.

தமிழகத்தைப் பொறுத்தவரை டெமி காட் என்ற நிலையில்தான் அரசியல் உள்ளது. நாங்கள் நிரந்தர தலைவர்கள், நீங்கள் நிரந்தர தொண்டர்கள் என்ற நிலையில் தமிழக அரசியல் உள்ளது. தலைவர்கள் தங்களைக் கடவுளாக நினைத்து மேலே போகிறார்கள். ஆனால் மக்கள் அதை உடைக்க பார்க்கிறார்கள்" என்று கூறினார்.

மேலும் பேசிய அண்ணாமலை, "தேர்தல் முடிவுகள் முழுமையாக வரும் முன்பே தெலங்கானாவில் டி.ஜி.பி ஒருவர் நீங்கள் தான் முதலமைச்சர் எனப் பூங்கொத்து கொடுத்தது தவறு. முதலமைச்சராக அவர் இருக்கையில் அமர்ந்த பிறகே அதிகாரிகள் அவரை சந்திக்கலாம். இது தமிழகத்தின் வியாதி, இப்போது பக்கத்து மாநிலங்களிலும் பரவி விட்டது" எனக் கூறினார்.

அமலாக்கத்துறை அதிகாரி மீதான சோதனை குறித்து: "மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை இரவு முழுவதும் ரெய்டு நடத்தினார்கள். அங்கித் திவாரியை தவிர்த்து வேறு சில வழக்குகள் சம்பந்தமான ஃபைல்களை அவர்கள் எடுத்து உள்ளனர். அந்த ஃபைல்களை அங்கித் திவாரியின் அறைக்கு கொண்டு சென்று, சிலருக்கு போன் செய்து அது குறித்து கூறியுள்ளனர்.

மேலும், சோதனை செய்யச் சென்ற 35 பேரில் ஒருவர் தான் அடையாள அட்டையை கார்டை காட்டி உள்ளார். ரெய்டு முடித்த பிறகு வழங்கிய பஞ்சநாமா-வில் 4 பேர் தான் கையெழுத்து போட்டு உள்ளார்கள். மற்ற 31 நபர்களும் கட்சிக் காரர்களா, அமைச்சரின் ஆட்களா எனத் தெரியவில்லை.

அமலாக்கத்துறை சி.சி.டி.வி-யை எடுத்து பார்க்கத்தான் போகிறார்கள். எனவே, அமலாக்கத்துறை கொடுத்த புகாரின் பேரில் டி.ஜி.பி அந்த புகாரை ஆழமாக எடுத்து மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். அமலாக்கத்துறை அலுவலகத்தில் மிக முக்கியமான கேஸ் ஃபைல்கள், இன்பார்மஸின் பெயர்கள் உள்ளன.

எனவே, அங்கு நடந்தது குறித்து டி.ஜி.பி அறிக்கையாகச் சொல்ல வேண்டும். தமிழக போலீஸ் தரப்பில் எத்தனை பேர் கடந்த ஆண்டு கைதாகி உள்ளார்கள். யார் தவறு செய்திருந்தாலும் விடக்கூடாது. அமலாக்கத்துறையை, தமிழகக் காவல்துறை, மின்சாரத்துறையை போன்ற துறைகளை ஆதரிப்போம். ஆனால், தவறு செய்பவர்களை எதிர்ப்போம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னையை புரட்டிப்போடும் மிக்ஜாம் புயல்; இன்று இரவு வரை கனமழை தொடரும் என எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.