ETV Bharat / state

கன்னியாகுமரியில் சுற்றுலா படகுகளின் நேரம் நீட்டிப்பு..! பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு..! - kanyakumari news

Kanyakumari tourist boats: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் வரும் 15ஆம் தேதி முதல் 3 நாட்களுக்குச் சுற்றுலா படகுகளின் இயக்கம் 4 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகப் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

kanyakumari tourist boats
கன்னியாகுமரியில் சுற்றுலா படகுகளின் நேரம் நீட்டிப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 6:07 PM IST

கன்னியாகுமரியில் சுற்றுலா படகுகளின் நேரம் நீட்டிப்பு

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரிக்குத் தினமும் பல ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முக்கடல் சங்கமம், காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம் போன்ற இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு கடல் நடுவே அமைந்து உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையைப் பார்த்து விட்டுச் செல்வது வழக்கம்.

அந்த வகையில், விவேகானந்தர் நினைவு மண்டபம் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றிற்குச் சுற்றுலாப் பயணிகள் தினசரி சென்று பார்த்து வருவதற்குச் சுற்றுலா படகுகளைப் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த படகுகள் தினசரி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இயக்கப்படுகின்றன.

விடுமுறைக் காலங்கள் பண்டிகை காலங்கள் சுற்றுலா சீசன் காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதும். இந்த நேரங்களில் சுற்றுலா படகுகளில் செல்வதற்கு மூன்று மணி நேரத்துக்கும் மேல் நீண்ட கியூ வரிசையில் நின்று காத்து இருந்து சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா படகுகளில் பயணம் செய்து வருகின்றனர்.

மேலும் முக்கிய சுற்றுலா சீசன் காலங்களில், படகுகளை இயக்கும் நேரம் மாற்றி அமைக்கப்படும். அந்த வகையில் எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதும் என்பதால், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக நான்கு மணி நேரம் சுற்றுலா படகுகளின் இயக்க நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

அதன் அடிப்படையில், காலை இரண்டு மணி நேரமும் மாலை இரண்டு மணி நேரமும் என்று பிரித்து சுற்றுலா படகுகளின் இயக்கத்தை நான்கு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 15ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்குச் சுற்றுலா படகுகள் கூடுதலாக நான்கு மணி நேரம் இயக்கப்படும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் தற்போது சுற்றுலாப் பயணிகள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

இதையும் படிங்க: தருமபுரியில் ஹனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்..ஹனுமனுக்கு 16 வகையான அபிஷேகம், சிறப்பு பூஜை..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.