கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள அஞ்சு கண்டரை பகுதியில் கால்வாயில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் அனிஷ் (வயது 30), அவரது மனைவி மஞ்சு மற்றும் ஒன்றரை வயது குழந்தை அமர்நாத் ஆகியோர் உயிரிழந்தனர். இவர்களது உடலை அரசு மருத்துவமனையில் பாதுகாக்க வசதி இல்லாததால் அருகில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாத்து வைத்திருந்தனர்.
இந்நிலையில், உடற்கூறு ஆய்வுக்காக குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு உடல்களைக் கொண்டுசென்றபோது, அங்கு உடற்கூறு ஆய்வுக்கு தேவையான தண்ணீர், ஊழியர்கள் கையில் அணிந்துகொள்ள கிளவுஸ் உள்ளிட்டவை இல்லாததால் ஊழியர்கள் உடல்களை உடற்கூறு செய்யாமல் இருந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்களின் உறவினர்களும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திமுக எம்எல்ஏ மனோ தங்கராஜ், காவல் துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வாகனத்தில் தண்ணீர் கொண்டுவர ஏற்பாடு செய்தார். பின்னர், உயிரிழந்தவர்களின் உடல்கள் கூறாய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க: கிணற்றிலிருந்து அடையாளம் தெரியாத உடல்கள் மீட்பு!