ETV Bharat / state

'மண் பானை செய்யும் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்' - தொழிலாளர்கள் கோரிக்கை

மண்பானைகள் செய்யும் தொழிலாளர்கள் பானைகள் செய்யத் தேவையான மண் எடுக்க உரிய நேரத்தில் அனுமதி கொடுக்க வேண்டும் என்றும்; பொங்கல் பரிசு தொகுப்பில் மண்பானையையும் சேர்த்து கொடுத்தால் மண்பானைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்கப்படும் என அரசுக்கு மண்பானைத் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மண்பானை செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்..! அரசுக்கு தொழிலாளர்கள் கோரிக்கை

author img

By

Published : Jan 8, 2023, 7:38 PM IST

'மண் பானை செய்யும் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்' - தொழிலாளர்கள் கோரிக்கை

கன்னியாகுமரி: பச்சரிசி, சர்க்கரை, மஞ்சள், கரும்பு, மண் பானை ஆகியவை தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் பாரம்பரிய அடையாளங்களாகும். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் பண்டிகைக்குத் தேவையான பாரம்பரியமிக்க மண் பானைகள் செய்யும் பணி கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான் கடை பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுங்கான் கடை, தேரேகால் புதூர், செண்பகராமன் புதூர், தாழாக்குடி, இரணியல், ஆளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் இந்த மண்பாண்டங்கள் செய்யும் தொழிலை நம்பி வாழ்ந்து வருக்கின்றனர். நவீன காலத்தில் சில்வர் பாத்திரங்கள், செம்பு பாத்திரங்கள், வெள்ளி பாத்திரங்கள், நவீன நான்ஸ்டிக் பாத்திரங்கள் எனப் பல வகை பாத்திரங்கள் பழக்கத்திற்கு வந்தாலும் கூட பாரம்பரியமிக்க மண்பானைகளுக்கு இன்றும் மவுசு இருந்துதான் வருகிறது.

அந்த வகையில் பொங்கலுக்கு மண்பானைகளில் பொங்கல் இடுவதை மக்கள் பாரம்பரியமிக்கதாக கருதுகின்றனர். அதற்காக இங்கு அரை கிலோ முதல் பத்து கிலோ வரை கொள்ளளவு கொண்ட பொங்கல் மண்பானைகள் தயாராகி வருகின்றன. இந்த மண்பானைகள் நாகர்கோவிலில் இருந்து நெல்லை, மதுரை, திருச்சி, சென்னை, கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் அனுப்பிவைக்கப்படுகின்றன.

ஆண்டு முழுவதும் மண்பானை செய்யும் தொழிலில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மழைக் காலம், கடும் வெயில் காலங்களில் இந்தப் பானை செய்யக்கூடிய காலநிலை நிலவாததால் தொழில் மந்தமடைவதுடன் தொழிலாளர்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது.

தற்போது பெரிய அளவு கொள்ளளவு கொண்ட பானைகள் தற்போது ஆர்டர்கள் அடிப்படையில் மட்டும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பொங்கல் சீசன் காலத்தில் பானைகளுக்கான தேவை அதிகம் இருக்கும் என்பதால் சீசன் காலத்தில் மண் பானைகள் உற்பத்தியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மண்பானைகளுக்கு தேவையான நேரத்தில் மண் கிடைப்பதில் சிக்கல் இருந்து வருவதாகவும், மண் எடுக்க தேவையான பாஸ் உரிய நேரத்தில் அரசு தரப்பில் வழங்காதது இந்த தொழில் பின்னடைவதற்கு ஒரு காரணம் என்றும் மண்பாண்டத் தொழிலார்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மழை கால நிவாரண உதவித் தொகையை 5,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்க அரசுக்கு மண்பாண்டத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி பொங்கலுக்கு அரிசி, கரும்பு, ரேஷன் கடைகள் மூலம் அரசு வழங்கும் நிலையில் அதில் மண் பானையும் சேர்ந்து வழங்கினால் மண்பாண்டத் தொழிலார்கள் வாழ்வாதாரம் மேம்படும் என கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: "திருவள்ளுவருக்கு உருவமே இல்லை" - நடிகர் சிவகுமார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.