ETV Bharat / state

கேரள பள்ளி சிறுவன் ஆதில் கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்! - Kanyakumari District crime News

கன்னியாகுமரியில் கேரள பள்ளி சிறுவன் ஆதில் கொலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டது. இது, இவ்வழக்கை விசாரித்துக்கொண்டிருந்த காவல் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கேரளா பள்ளி சிறுவன் ஆதில் கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்

author img

By

Published : Dec 14, 2022, 5:19 PM IST

கன்னியாகுமரி: திட்டுவிளையைச் சேர்ந்தவர் சபிதா. இவருடைய கணவர் கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர். அவர் அங்கே கட்டட ஒப்பந்தப் பணிகளை செய்து வருகிறார். கோடை விடுமுறைக்காக கொல்லத்திலிருந்து சபிதா குழந்தைகளுடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திட்டுவிளை ஊரில் தனது தாய் வீட்டிற்கு கடந்த மே மாதம் வந்துள்ளார்.

அந்த நேரத்தில் அவருடைய இரண்டாவது மகன் ஆதில் மே மாதம் 8ஆம் தேதி மர்மமான முறையில் குளத்தில் சடலத்தில் கண்டெடுக்கப்பட்டார். தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், ஆதிலின் நண்பன் மர்ம நபர்களுடன் சேர்ந்து தனது மகனை குளத்தில் மூழ்கடித்து கொலை செய்துள்ளதாகவும் சிறுவனின் தாய் கூறினார்.

இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். ஆதிலை சிவப்பு நிறச்சட்டை அணிந்த ஒரு சிறுவன் அழைத்துச்சென்ற சிசிடிவி காட்சிகளும், பின்னர் அழைத்துச் சென்ற சிறுவன் மட்டும் தனி நபராக நடந்து வரும் காட்சிகளும் போலீசார் கையில் கிடைத்துள்ளன. ஆனால், கொலை விசாரணையில் எந்த துப்பும் கிடைக்காததால் மாணவர் ஆதிலின் மரணம் ஒரு மர்மமாகவே இருந்து வருவதாக திட்டுவிளை ஊர் மக்களும், உறவினர்களும் கூறுகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்ட போலீசாரின் விசாரணையில் மக்களுக்கு நம்பிக்கை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்கள். இது சம்பந்தமாக திட்டுவிளையில் கடந்த மே, ஜூன் ஆகிய மாதங்களில் போலீசாரை கண்டித்து பல்வேறு போராட்டங்களில் திட்டுவிளை ஊர் மக்கள் ஈடுபட்டும் தீர்வு கிடைக்கவில்லை.

இதனால் மனம் உடைந்து பாதிக்கப்பட்ட ஆதிலின் தந்தை முகம்மது நிஜிபூ கேரளா மாநிலத்தின் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து தன்னுடைய பிரச்னையை கோரிக்கையாக கொடுத்துள்ளார். அவர்களும் உடனடியாக நீதி விசாரணை வேண்டும் எனவும், சரியான முறையில் உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் கூறி கேரள முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கடிதம் எழுதினார்.

அதனடிப்படையில் குமரி மாவட்ட போலீசார் விசாரணை நடத்தியும், வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதனைத் தொடர்ந்து கேரளாவில் உள்ள அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் ஏராளமானவர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கடிதம் அளித்துள்ளனர்.

இந்த விசாரணையை குமரி மாவட்ட போலீசாரிடமிருந்து சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளனர். அதிலும் எந்த முன்னேற்றமும் இல்லை, கேரளா முதலமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் மூலம் இந்த வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வலியுறுத்தி 8 மாதங்களாகியும் குமரி மாவட்ட பூதப்பாண்டி போலீசார் நடவடிக்கை எடுக்காததால் கேரள போலீசார் தமிழ்நாடு டிஜிபி-க்கு எழுதப்பட்ட கடிதம் மூலம் இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இதையும் படிங்க: குடும்பநல நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து இடைக்கால ஜீவனாம்சம் வழங்க உத்தரவிடலாம்: உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.