ETV Bharat / state

Panguni Uthiram: தேவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு!

பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர்சந்தையில் பூக்களின் விலை ரூ.500 முதல் ரூ.1500 வரை உயர்ந்துள்ளது.

the flower rate was increase in market for panguni utthiram
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பூக்களின் விலை திடீர் உயர்வு!
author img

By

Published : Apr 3, 2023, 1:41 PM IST

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பூக்களின் விலை திடீர் உயர்வு!

கன்னியாகுமரி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற மலர் சந்தையில் முக்கிய பூச்சந்தையாகக் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூச் சந்தை விளங்குகிறது. கோவில்பட்டி ராஜபாளையம் , கொடைக்கானல் , திண்டுக்கல் , பெங்களூர் ,சேலம், ஓசூர் உள்ளிட்ட வெளியூர்களிலிருந்து மல்லிகை பூ , பிச்சிப் பூ, மஞ்சள் கிரந்தி , வாடாமல்லி உள்ளிட்ட அனைத்து வகை கலர் பூக்களும் தோவாளை பூச்சந்தைக்கு விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன.

இங்குக் கொண்டு வரப்படும் பூக்கள் அண்டை மாநிலமான கேரளாவுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மிகப்பெரிய ஒரு பூ வர்த்தக மையமாக தோவாளை பூ சந்தை திகழ்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாகப் பண்டிகை காலங்கள், முகூர்த்த காலங்கள் மற்றும் பல்வேறுபட்ட விசேஷ காலங்களில் பூக்களின் விலை இங்கு அதிகரித்துக் காணப்படும்.

கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கிய நாள் முதல் பூக்களின் விலை மிகவும் குறைந்து காணப்பட்டது. குறிப்பாக பிச்சிப்பூ , மல்லிகைப்பூ உட்பட அனைத்து பூக்களும் விலையும் வீழ்ச்சி அடைந்து இருந்தது. இந்நிலையில், நாளை பங்குனி உத்திரம் என்பதால் பொதுமக்கள் குடும்பமாக வந்து கோவில்களில் விசேஷ பூஜைகள் , வழிபாடுகள் நடத்துவது வழக்கம். வழிபாடு நிகழ்வுகளுக்கு அதிக பூக்கள் பயன்படுத்தப்படுவதால், அனைத்து பூக்களும் விலை உயர்ந்துள்ளது.

அந்த வகையில் ஏப்ரல்-5 பங்குனி உத்திரம் என்பதால், தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. நேற்று(ஏப்.2) மல்லிகை பூ கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 500 முதல் 600 ரூபாய்க்கும் மேலும், 750 ரூபாய் என்ற அளவில் விற்பனையிலிருந்த பிச்சிப் பூ இன்று 1200 முதல் 1500 ரூபாயாக உயர்ந்துள்ளது.

70 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி பூ இன்று 320 ரூபாயாகவும், 110 ரூபாய்க்கு விற்ற மஞ்சள் கிரேந்தி இன்று 120 ரூபாயாகவும், 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பட்டன் ரோஸ் 150 ரூபாயாகவும், ஆறு ரூபாய்க்கு விற்பனை செய்த தாமரை பூ இன்று பத்து ரூபாயாகவும், 100 ரூபாய்க்கு விற்பனை செய்த அரளி பூ இன்று 150 ரூபாயாகவும், 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கோழி பூ இன்று 300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதைபோல், அனைத்து வகை பூக்களும் விலை உயர்ந்து காணப்படுகிறது.

இதையும் படிங்க: மே மாதத்தில் ஆசிரியர் பணிக்கான தேர்வு அறிவிப்பு- டிஆர்பி தலைவர் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.