ETV Bharat / state

நாகர்கோவிலில் விநாயகர் சிலைகள் வடிவமைப்பு... இறுதிகட்டப்பணிகள் தீவிரம்...

author img

By

Published : Aug 26, 2022, 5:50 PM IST

விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஐந்து நாட்கள் உள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்ட நாகர்கோவிலில் விநாயகர் சிலைகள் வடிவமைப்புப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

நாகர்கோவிலில் விநாயகர் சிலைகள் வடிவமைப்பு இறுதி கட்ட பணிகள் தீவிரம்

கன்னியாகுமரி: விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். விநாயகர் சதுர்த்தி அன்று பல்வேறு பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளைத்தொடர்ந்து மூன்று நாட்கள் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் மாவட்டம் முழுவதும் நடைபெறும். பின்னர் நீர் நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக, விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் முறையாக கோலாகலமாகவும் நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டில் கரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதால், இரண்டு ஆண்டுகளுக்குப்பின்பு மீண்டும் எழுச்சியாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனைத்து தரப்பு மக்களும் தயாராகி வருகின்றனர்.

அகில பாரத இந்து மகாசபை சார்பில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்படுகின்றன. ஒரு அடி முதல் ஏழரை அடிவரை உயரம் கொண்ட விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. விழாவிற்கு இன்னமும் ஐந்து நாட்களே இருக்கும் காரணத்தால் விநாயகர் சிலை வடிவமைப்புப் பணிகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளன.

கற்பூர விநாயகர், யானை விநாயகர், மயில் விநாயகர், சிங்கமுக விநாயகர், சிவலிங்க விநாயகர், கருட விநாயகர் எனப்பல அம்சங்களைக்கொண்ட விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த விநாயகர் சிலையை வடிவமைப்பதற்காக பண்ருட்டியில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் வருகை தந்து, கடந்த 20 நாட்களாக சிலை அமைப்புப்பணிகளை செய்து வருகின்றனர்.

’அரசாங்கத்தினுடைய கட்டுப்பாடுகள் விதிமுறைகளுக்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தாலும் விழாவின் வேகத்தைக் குறைக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக இந்து மகாசபை முக்கிய நிர்வாகிகளை 107 சட்டப்பிரிவின்படி கைது செய்ய அரசு முயற்சி செய்து வருவது ஏற்றுக்கொள்ளமுடியாது. அனைத்துத் தடைகளையும் தாண்டி விழா கோலாகலமாக நடைபெறும்’ எனக் கூறிய அகில பாரத இந்து மகாசபா தலைவர் பாலசுப்ரமணியம், ’10 அடிக்கு மேல் விநாயகர் சிலைகள் வைக்கக் கூடாது என அரசு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளதால், அதிகபட்சம் 7 அடிவரை சிலைகள் வடிவமைக்கபட்டு வருகிறது’ என அவர் தெரிவித்தார்.

நாகர்கோவிலில் விநாயகர் சிலைகள் வடிவமைப்பு... இறுதிகட்டப்பணிகள் தீவிரம்...

இதையும் படிங்க:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 20,000 போலீசார் குவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.