டெல்லியில் கடந்த 60 நாள்களுக்கும் மேலாக மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு, விவசாயிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து, விவசாயிகள் டிராக்டர் பேரணியில் இன்று(ஜனவரி 26) ஈடுபட்டனர்.
இந்நிலையில், டெல்லியில் டிராக்டர் பேரணியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகேயுள்ள அம்பலக்காலை பகுதியைச் சேர்ந்த கட்டடப் பொறியாளரான ஜெரின் டிராக்டரில் சென்று திருமணம் செய்தார். வாழைகுலைகள், பலாப்பழம், வைக்கோல் உள்ளிட்ட பொருள்களால் அலங்கரிக்கப்பட்ட டிராக்டரில் ஊர்மக்களுடன் சென்று திருமணம் செய்து மணமகள் பபியை அழைத்து வந்தார்.
இது குறித்து மணமகன் ஜெரின் கூறுகையில், "டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கும், டிராக்டர் பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் டிராக்டரில் சென்று எனது திருமணத்தை நடத்தினேன்" என்றார்.
இதையும் படிங்க: படுத்தபடுக்கையான பெண்ணை பெருங்காதல் கொண்டு கரம்பிடித்த மாப்பிள்ளை!