ETV Bharat / state

இரணியல் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை! - லஞ்ச ஒழிப்புத்துறையினர்

கன்னியாகுமரி இரணியல் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனைமேற்கொண்டதில் கணக்கில் வராத ரூ.5 லட்சம் பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்.

இரணியல் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை!

author img

By

Published : Nov 5, 2022, 12:58 PM IST

கன்னியாகுமரி: இரணியல் சார்பதிவாளர் அலுவலகத்தில் நிரந்தராக பணியாற்றும் சார்பதிவாளர்களுக்கு கட்டாய விடுப்பு கொடுத்து அந்த நாளில் மாவட்ட பதிவாளர்கள் அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்களை பொறுப்பு சார் பதிவாளர்களாக நியமித்து லஞ்சம் பெற்று கொண்டு முறைகேடாக ஆவணங்கள் பதிவு செய்து வருவதாக தொடர் குற்றசாட்டுகள் எழுந்தது.

இது குறித்து பொதுமக்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மற்றும் பத்திரபதிவு துறை டிஐஜி ஆகியோருக்கு புகார் அனுப்பி வந்தனர்.இந்நிலையில் பொறுப்பு சார்பதிவாளர் பத்திர பதிவு செய்வதாகவும் தொடர்த்து பதிவுக்கான ஆன்லைன் பதிவு டோக்கன்களை நிறுத்தி வைத்துவிட்டு பொதுமக்கள் பத்திரபதிவு செய்யமுடியாத நிலையில் அந்த டோக்கன்களை அதிகாரிகளே தங்களுக்கு வேண்டிய ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு வழங்கி முறைகேடாக பத்திரபதிவு செய்து வருவதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இரணியல் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை!

இதையடுத்து மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை துணை கண்காணிப்பாளர் பீட்டர் பால் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பொறுப்பு சார்பதிவாளர் சுப்பையாவிடமிருந்து கணக்கில் வராத ரூ.4,52,8,00 மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து சுவாமிதோப்பு அருகே விஜயநகரி பகுதியை சேர்ந்த பொறுப்பு சார்பதிவாளர் சுப்பையா சார்பதிவாளர் அலுவலகம் ஊழியர்கள் 4 பேர் மற்றும் இடைதரகர்கள் 6 பேர் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:பெற்றோரையும், குழந்தைகளையும் கொலை செய்தவர் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.