தமிழ்நாடு முழுவதும் நீர்நிலை புறம்போக்குகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் அலுவலர்கள் ஈடுபட்டுவந்தனர். ஆனால், தற்போது அப்பணிகளில் அலுவலர்கள் ஈடுபடவில்லை என விவசாய சங்கங்கள் குற்றஞ்சாட்டிவருகின்றன.
இந்நிலையில், தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் நீர்நிலைப் பகுதியை தனி நபர்கள் ஆக்கிரமித்து வர்த்தக நிறுவன கட்டடம் கட்டிவருவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பொதுமக்கள் கூறுகையில், உரிய ஆவணங்கள் இன்றி கட்டடம் கட்டுகின்றனர். இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:
நீர்நிலைகள் தூர்வாரும் இரண்டாம் கட்ட பணிகள் பிப்ரவரியில் தொடக்கம்