கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி அருகுவிளையை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவரது மகன் அணிஷ் (24). இவர் பள்ளிவிளை பகுதியிலுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் இன்று(ஏப்ரல் 22) காலை நாகர்கோவில் டவுன் ரயில்வே நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே காவல்துறையினர், அணிஷ் உடலைக் கைப்பற்றியதோடு, இவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு இறந்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் நாகர்கோவில் டவுன் ரயில்வே நிலையத்தில்ம் போதிய சிக்னல் வசதிகள் இல்லாததால் அடிக்கடி உயிர்பலி சம்பவங்கள் நடந்து வருவது குறிப்பிட்டத்தக்கது.