கன்னியாகுமரி பொற்றையடியிலிருந்து சாமிதோப்பு செல்லும் வழியில் இசக்கியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வழிபாடு செய்வது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் நீர்நிலைப் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, இசக்கியம்மன் கோயிலை இடித்து அகற்ற நேற்று பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் வல்சன்போஸ், கன்னியாகுமரி துணைக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், ஆய்வாளர் முத்து ஆகியோர் வந்தனர்.
பின்னர் கோயிலை ஜேசிபி உதவியுடன் இடித்து அகற்றும் பணி நடந்தது. அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமானோர் கோயிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து அலுவலர்கள் கோயிலிலிருந்த சிலைகளைப் பத்திரமாக எடுத்துவிட்டு கோயிலை இடித்தனர். பின்னர் சிலைகள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
இதையும் படிங்க: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட செங்கற்கள் அனுப்பிய கிராம மக்கள்.!