தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் தன் குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதியம் 1.30 மணிக்கு திருவனந்தபுரம் சென்றார். பிறகு அங்கிருந்து குமரி மாவட்டம் தக்கலைக்கு வந்த அவர் உணவருந்தி ஒரு மணி நேர ஓய்வுக்கு பிறகு மாலை 3 மணி அளவில் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர விடுதிக்கு நம்பர் பிளேட் இல்லாத காரில் சென்றுள்ளார்.
அவருக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுடன், கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் பலத்த காவல்துறை பாதுகாப்பு தரப்பட்டது. நட்சத்திர விடுதியில் தங்கி இருக்கும் சுற்றுலா பயணிகள் அனைவரையும் சோதித்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இன்று மாலை ஓய்வெடுக்கும் அவர் நாளை காலை சூரிய உதயத்தினை பார்த்துவிட்டு தெலுங்கானாவுக்கு திரும்புகிறார்