ETV Bharat / state

குமரியில் கால்பதித்த கேசிஆர்!

நாகர்கோவில்: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தனது குடும்பத்தினருடன் நேற்று சூரிய அஸ்தமனத்தை பார்த்து ரசித்தார்.

சந்திரசேகர் ராவ்
author img

By

Published : May 9, 2019, 8:08 AM IST

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தனது குடும்பத்தினருடன் நேற்று சென்றார். திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் கன்னியாகுமரிக்குச் சென்றுள்ளார்.

புகழ்பெற்ற சூரிய அஸ்தமனத்தினையும் தனது குடும்பத்தினருடன் பார்த்த பின்னர், முக்கடல் சங்கமிக்கும் கடற்கரைக்குச் சென்றுள்ளார். கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளுடன் மக்களோடு மக்களாக கலந்து தனது சுற்றுலாப் பயணத்தைத் தொடர்ந்தார்.

கன்னியாகுமரியில் சூரிய அஸ்தமனத்தை பார்த்த சந்திரசேகர் ராவ்

கூட்டாட்சி கூட்டணி அமைப்பது குறித்து பல்வேறு மாநில முக்கிய அரசியல் கட்சிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவரும் சந்திரசேகர் ராவ் தற்போது, கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுள்ளது அரசியல் நோக்கர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சுற்றுலாப் பயணத்தில் கூட அரசியல் இருக்கிறதோ என்ற ஐயத்தையும் எழுப்புகின்றனர்.

Intro:சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தனது குடும்பத்தினருடன் வருகை .பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தேர்தல் முடிவுகளுக்கு முன்பே மூன்றாவது அணியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து.

Body:சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தனது குடும்பத்தினருடன் வருகை .பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தேர்தல் முடிவுகளுக்கு முன்பே மூன்றாவது அணியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று குடும்பத்தினருடன் வருகை தந்தார். திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் வந்த அவர் மாலை வேளையில் கன்னியாகுமரி வந்தடைந்தார். பின்னர் சூரிய உதயத்திற்கும் சூரிய அஸ்தமனத்திற்கும் புகழ்பெற்ற கன்னியாகுமரியில் தனது குடும்பத்தினருடன் மாலைப் பொழுதை கழித்தார். சூரிய அஸ்தமனத்தை பார்த்து மகிழ்ந்தார். பின்னர் முக்கடல் சங்கமிக்கும் கடற்கரையில் சுற்றிப் பார்த்தார் .கடற்கரையில் சுற்றுலா பயணிகளுடன் மக்களோடு மக்களாக கலந்து தனது சுற்றுலா பயணத்தை உற்சாகமாக கொண்டாடினார். இவருடன் மனைவி மகன் பேரக் குழந்தைகள் என அனைவரும் வந்திருந்தனர் .இவர் தொடர்ந்து மாநில அரசியல் தலைவர்களை சந்தித்து வருவது பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழ்நிலையில் கன்னியாகுமரிக்கு வந்திருப்பது தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே மூன்றாவது அணியை உருவாக்குவது தொடர்பாக சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.