ETV Bharat / state

குமரியில் டாரஸ் லாரி சாலையோர கால்வாயில் கவிழ்ந்து விபத்து

author img

By

Published : Dec 11, 2020, 3:52 PM IST

கன்னியாகுமரி: நாகர்கோவில் - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் விசுவாசபுரம் அருகே டாரஸ் லாரி சாலையோர கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

lorry accident
lorry accident

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து வள்ளியூர் நோக்கி டாரஸ் லாரி சென்று கொண்டிருந்தது. விசுவாசபுரம் அருகே டாரஸ் லாரி மிக வேகமாக சென்றபோது, ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோராம் உள்ள கால்வாயில் டாரஸ் லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், கால்வாயில் தண்ணீர் இல்லாததால் டாரஸ் லாரியின் ஓட்டுநர் மற்றும் கிளினர் சிறு காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதே பகுதியில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப்பகுதி வளைவுகள் கொண்ட அபாயகரமான சாலை எனவே கவனமாக செல்ல வேண்டும் என்பது குறித்த அறிவிப்பு பலகை வைக்காத காரணத்தினாலேயே அடிக்கடி ஏற்படும் விபத்தால் உயிரிழப்பு சம்பவமும் நிகழ்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். எனவே, தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பாக உடனடியாக எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளரின் வீட்டில் கணக்கில் வராத ரூ. 62 லட்சம் பறிமுதல்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.