சித்திரை மாதத்தின் முதல் நாளை, தமிழர்கள் தமிழ் புத்தாண்டை பாரம்பரியமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் குமரி மாவட்டத்தில் நாகராஜா கோவில், நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
அதன்படி நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவிலில் நடைபெற்ற கனி காணும் நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர். இதில் பக்தர்களுக்கு பாரம்பரிய முறைப்படி காசுகளைக் கை நீட்டமாகவும் காய் கனிகளை பிரசாதமாகவும் வழங்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு முழுவதும் ஐஸ்வர்யம், மண் வளம மற்றும் மழை பெருகும் என்னும் பக்தர்கள் நம்பிக்கைத் தெரிவித்தனர்.