தமிழ்நாடு தேசிய தொழிலாளர் அமைப்பு பொதுக்குழுக் கூட்டம் கன்னியாகுமரியிலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் எம். ஜெயப்பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியம் குறைந்தபட்சம் மூவாயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின்கீழ் தற்போது, ஆயிரத்து 500-க்கும் மட்டுமே சந்தா பிடித்தம் செய்யப்படுகிறது.
இந்த நிலையை மாற்றி தொழிலாளர்களின் எதிர்காலம், பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு மொத்த ஊதியத்துக்கும் வைப்புநிதி சந்தா பிடித்தம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.