ETV Bharat / state

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பால் வெள்ள பாதிப்பு அதிகரிப்பு: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சாடல்!

KS Alagiri : தமிழகத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க ஓராண்டுக்குள் தமிழக அரசு ஒரு முழு திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர்.கே.எஸ்.அழகிரி
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பால் வெள்ள பாதிப்பு அதிகரிப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 19, 2023, 11:14 AM IST

கன்னியாகுமரி: தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் உள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால் மழை காலத்தில் வெள்ள பாதிப்புகள் அதிகமாகி வருகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் புதிதாக உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தென் மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழையானது பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இடைவிடாது நேற்று முன்தினம் முதல் அதிக கனமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வெள்ளமாகக் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது.

அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் பள்ளிகள் மற்றும் மண்டபங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேரில் சந்தித்து அவர்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார். இதில், எம்எல்ஏக்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது, “ தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் உள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால் மழை காலத்தில் வெள்ள பாதிப்புகள் அதிகமாகி வருகிறது. எனவே, தமிழக அரசு இதனை ஒரு முக்கிய பிரச்சினையாக கருத்தில் கொண்டு நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னையில் தொடர்ந்து, 17 மணி நேரம் மழை பெய்ததால் பொதுமக்கள் பாதிப்பை சந்திக்க நேர்ந்தது. இந்தியாவில் எந்த மாநிலமும் தொடர்ச்சியாக 17 மணி நேரம் மழையை சந்தித்தது கிடையாது. எனவே, தமிழக அரசு, ஓராண்டுக்குள் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க ஒரு முழு திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட செந்தூர் எக்ஸ்பிரஸ்.. 10 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கி தவிக்கும் 500 பயணிகளின் நிலை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.