கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தமிழ் வளர்ச்சி துறை சார்பில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழா ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் மார்ச் 4ஆம் தேதிவரை கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இவ்விழாவின் இறுதி நாளான இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில் தமிழ் மொழியை ஆட்சி மொழியாகவும், தமிழில் கையெழுத்திட வேண்டும், தமிழில் பெயர் வைக்க வேண்டும், தமிழ் மொழியை காக்க வேண்டும் உள்ளிட்ட பதாகைகளை கையில் ஏந்தி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பேணியாக சென்றனர்.
இதையும் படிங்க: மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை வழங்கக் கோரி கையெழுத்து இயக்கம்