கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஊராட்சி ஒன்றியம் மூன்றாவது வார்டில் ஜெசிந்தா மேரி என்பவர் திமுக சார்பில் போட்டியிட்டார். கடந்த 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை தக்கலை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது. அதில், வாக்குகள் எண்ணும்போது ஜெசிந்தா மேரியின் முகவர்களும் அங்கு இருந்தனர்.
அதேவேளையில், வாக்குகள் எண்ணிக்கொண்டிருந்த அலுவலர்கள் இவர்களுக்கு சாதகமான வாக்குச்சீட்டுகளை மாற்று கட்சியினரின் வாக்குப்பெட்டியில் போட்டுள்ளனர். அதனைத் தட்டிக் கேட்டுள்ளார். இருந்தபோதிலும் அரசு அலுவலர்கள் அதனைக் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
பின்னர் வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் ஜெசிந்தா மேரியை விட 20 வாக்குகள் அதிகமாகப் பெற்று பாஜக வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அப்போது, அங்கிருந்த திமுக முகவர்கள் அலுவலர்களிடம் மறுவாக்கு எண்ணிக்கைக்கு வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அதையும் அலுவலர்கள் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. ஆகவே அவர்கள் வெற்றிபெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் எனவும் பகுதியில் உள்ள வாக்குகளை மறு எண்ணிக்கை செய்ய வேண்டும்.
இல்லையெனில், பதவியேற்பு நிகழ்வினை நிறுத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜெசிந்தா மேரி, அவரது ஆதரவாளர்கள் நேற்று தேர்தல் அலுவலர்களைச் சந்தித்து புகார் மனு அளித்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: