ETV Bharat / state

குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்; ஜப்தியை நிறுத்திய தாசில்தார்!

கன்னியாகுமரி: வங்கியில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாவரின் வீட்டை ஜப்தி செய்ய முயன்றபோது, குழந்தைகளுடன் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்ததால், தாசில்தார் ஜப்தி நடவடிக்கையை தடுத்து நிறுத்தினார்.

tahsildar stoped bank seizure
author img

By

Published : Jul 9, 2019, 8:13 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், திருப்பதிசாரம் பூங்கா நகரைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் தனது தொழில் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் கடந்த 2014ஆம் ஆண்டு ரூ.17 லட்சம் கடன் வாங்கியிருந்தார். கடனை மாதம் தொறும் செலுத்தி வந்த கண்ணன், சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு ஏற்பட்ட விபத்தால், வாங்கிய கடனை அவரால் சரிவர செலுத்த முடியவில்லை.

வட்டி செலுத்தாத காரணத்தால் கண்ணன் வீட்டை ஜப்தி செய்ய வங்கி நிர்வாகம் முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து இன்று அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் காவல்துறை, தோவாளை தாசில்தார் சொக்கலிங்கம் தலைமையில் வருவாய் துறை அலுவலர்கள் துணையோடு வங்கி அலுவலர்கள் வீட்டை ஜப்தி செய்ய வந்துள்ளனர். அப்போது கண்ணனின் மனைவி குழந்தைகளுடன் அவமானம் தாங்காமல் வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தாசில்தார், வீட்டை ஜப்தி செய்ய வேண்டாம். அவருக்கு சில நாட்கள் அவகாசம் கொடுக்கலாம் என்று வங்கி அலுவலர்களிடம் தெரிவித்தார். ஆத்திரமடைந்த வங்கி அலுவலர் ஒருவர் தாசில்தாரின் சட்டையை பிடித்து, ஜப்தி செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். இதற்கு மறுத்த தாசில்தார் வீட்டை விட்டு வெளியேறினார்.

குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்; ஜப்தியை நிறுத்திய தாசில்தார்!

மற்றோரு வங்கி அலுவலர் வீட்டை ஜப்தி செய்யுமாறு கூறி நடுரோட்டில் வைத்து தாசில்தார் காலில் விழுந்து கதறி அழுது கண்ணீர் விட்டார். எனினும் தனக்கு வீட்டின் உள்ளே இருக்கும் உயிர்களே முக்கியம் எனக் கூறி ஜப்தி செய்யமுடியாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதனால் ஜப்தி நடவடிக்கையில் இருந்து வங்கி ஊழியர்கள் பின்வாங்கியதோடு, பணத்தை செலுத்த கண்ணன் குடுமபத்தாருக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கி திரும்பி சென்றனர். தாசில்தாரின் மனிதாபிமான செயல் அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சி அடைய வைத்தது.

Intro:கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதிசாரம் பகுதியில் வங்கி கடனை செலுத்தாதவரின் வீட்டை காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் துணையுடன் ஜப்தி செய்ய வந்த வங்கி அதிகாரிகள். ஜப்தியை தடுக்க தற்கொலைக்கு முயன்ற பெண் மற்றும் குழந்தைகள். இதனால் உயிர்களை காப்பாற்ற ஜப்தியை தடுத்த தாசில்தார். ஆத்திரமடைந்த வங்கி அதிகாரி தாசில்தார் சட்டையை பிடித்தும் கையை பிடித்தும் இழுத்தார். ஒரு வங்கி அதிகாரி ஜப்தி செய்ய கோரி நடு ரோட்டில் வைத்து தாசில்தார் காலில் விழுந்து கதறி அழுதார். உயிர்களே முக்கியம் என ஜப்தி நடவடிக்கையை தடுத்த தாசில்தார். Body:TN_KNK_02_09_THASILDAR_NOTJAPTHI_SCRIPT_TN10005

கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதிசாரம் பகுதியில் வங்கி கடனை செலுத்தாதவரின் வீட்டை காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் துணையுடன் ஜப்தி செய்ய வந்த வங்கி அதிகாரிகள். ஜப்தியை தடுக்க தற்கொலைக்கு முயன்ற பெண் மற்றும் குழந்தைகள். இதனால் உயிர்களை காப்பாற்ற ஜப்தியை தடுத்த தாசில்தார். ஆத்திரமடைந்த வங்கி அதிகாரி தாசில்தார் சட்டையை பிடித்தும் கையை பிடித்தும் இழுத்தார். ஒரு வங்கி அதிகாரி ஜப்தி செய்ய கோரி நடு ரோட்டில் வைத்து தாசில்தார் காலில் விழுந்து கதறி அழுதார். உயிர்களே முக்கியம் என ஜப்தி நடவடிக்கையை தடுத்த தாசில்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதிசாரம் பூங்கா நகரை சேர்ந்தவர் கண்ணன். இவர் தனது தொழில் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு மெர்கென்டல் வங்கியில் கடந்த 2014 ம் ஆண்டு 17 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். கடனை மாதம் செலுத்தி வந்த நிலையில் கண்ணன் சில மாதங்களுக்கு முன்பு திடிரென விபத்தில் சிக்கி கொண்டார். இதனால் தான் வாங்கிய கடனை வங்கியில் கண்ணனால் செலுத்த முடியவில்லை. இதனை தொடர்ந்து வாங்கிய கடனை வட்டியுடன் கண்ணன் செலுத்தாத காரணத்தால் கண்ணன் குடியிருக்கும் வீட்டை ஜப்தி செய்ய வங்கி நிர்வாகம் முடிவு செய்தது. இதனை தொடர்ந்து இன்று கண்ணன் வீட்டில் இல்லாத நேரத்தில் காவல்துறை மற்றும் தோவாளை தாலுகா தாசில்தார் சொக்கலிங்கம்பிள்ளை தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் துணையோடு வங்கி அதிகாரிகள் வீட்டை ஜப்தி செய்ய முயன்றனர். இதனை கண்ட கண்ணனின் மணைவி குழந்தைகள் அவமானம் தாங்காமல் வீட்டின் உள் கதவை பூட்டி கொண்டு தூக்கு போட்டு தற்கொலைக்கு செய்ய முயன்றார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த தாசில்தார் தற்பொழுது வீட்டை ஜப்தி செய்ய வேண்டாம் சில நாட்கள் கால அவகாசம் கொடுக்கலாம் என வங்கி அதிகாரிகளிடம் தெரிவித்ததோடு வீட்டில் இருந்து வெளியேற முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த வங்கி அதிகாரி தாசில்தாரின் சட்டையை பிடித்தும் கையை பிடித்தும் இழுத்து தடுத்ததோடு ஜப்தி செய்ய வேண்டும் என வலுகட்டாய படுத்தினார். ஆனாலும் மறுத்த தாசில்தார் வீட்டை விட்டு வெளியேறினார். இதனிடையே யாரும் எதிர்பாராத வண்ணம் மற்றோரு வங்கி அதிகாரி தாசில்தாரை தடுத்து நிறுத்தி வீட்டை ஜப்தி செய்யுமாறு கூறி நடு ரோட்டில் வைத்து தால்தார் காலில் விழுந்து கதறி அழுது கண்ணீர் விட்டார். இருந்தபொழுதும் தனக்கு வீட்டின் உள்ளே இருக்கும் உயிர்களே முக்கியம் என. கூறி ஜப்தி செய்ய மறுத்தார். மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் தெரிவித்தார் . இதனால் அச்சமடைந்த வங்கி ஊழியர்கள் ஜப்தி நடவடிக்கையில் இருந்து பின்வாங்கியதோடு வங்கியில் பணத்தை செலுத்த கண்ணனுக்கு ஒரு வாரம் கால அவகசம் வழங்கியது. தாசில்தாரின் மனிதாபிமான செயலை அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்தது.மேலும் இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.