அகிலத்திரட்டு அம்மானை அய்யாவழி மக்கள் புனித நூலாக பின்பற்றி வருகின்றனர். இந்தப் புனித நூலை உலகிற்கு அருளிய தினத்தை அய்யா வழி பக்தர்கள் அகிலத்திரட்டு அம்மானை உதய தினமாக அனுசரித்துவருகின்றனர். இந்நிலையில் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் இவ்விழா இன்று (டிச.12) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பூஜிதகுரு பால ஜனாதிபதி தலைமை வகித்தார். அப்போது பக்தர்கள் அகிலத்திரட்டு அம்மானை கையில் ஏந்தியபடி தலைமைப்பதியை சுற்றி வலம் வந்து அய்யாவை வழிபட்டனர். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இதுபோல் சுவாமிதோப்பு அன்புவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பூஜித குரு பாலபிரஜாபதி அடிகளார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநரும், அதிமுக தலைமைக்கழக நட்சத்திர பேச்சாளருமான பி.சி. அன்பழகன், ராமேஸ்வரம் ஆத்ம சித்தர் லக்ஷ்மி அம்மா, முன்னாள் எம்பி வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.