ETV Bharat / state

பேருந்து இயக்கம் குறித்து போக்குவரத்துக் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை - பேருந்துகள் இயக்க அனுமதி

கன்னியாகுமரி : பேருந்து இயக்கம் குறித்து தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் போக்குவரத்துக் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தளவாய் சுந்தரம்
தளவாய் சுந்தரம்
author img

By

Published : Sep 6, 2020, 2:19 PM IST

பேருந்துகள் இயக்கப்படுவது குறித்த போக்குவரத்துக் கழக நிர்வாகிகளுடனான ஆலோசனை, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் போக்குவரத்துக் கழக அலுவலர்கள், அரசு உயர் அலுவலர்கள் தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பணிமனைகளிலும் பணியாற்றும் தொழிலாளர்கள், ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உட்பட அனைத்துத் தொழிலாளர்களுக்கும் பயன்படும் வகையில், மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள முகக் கவசங்கள், கிருமி நாசினி, கபசுரக் குடிநீர் தூள் ஆகியவற்றை அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் போக்குவரத்துக் கழக நிர்வாகிகளிடம் வழங்கினார்.

மேலும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு கூடுதல் பேருந்துகளை இயக்குவது குறித்தும், செப்டம்பர் 7ஆம் தேதி முதல் புறநகர் பேருந்துகள் உள்பட முழுமையான அளவில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதால் மேற்கொள்ளப்படவுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.