ETV Bharat / state

மருந்து கடைகளில் முகக்கவசங்களின் விலை திடீர் உயர்வு - மருந்து கடையில் போலீசார் அதிரடி சோதனை

கன்னியாகுமரி: கரோனா வைரஸ் பீதியைத் தொடர்ந்து மருந்து கடைகளில் முகக் கவசங்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறதா என்று காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

சோதனையில் ஈடுப்பட்ட காவல்துறையினர்
சோதனையில் ஈடுப்பட்ட காவல்துறையினர்
author img

By

Published : Mar 23, 2020, 5:41 PM IST

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் காரணமாக பொது மக்கள் பீதியுடன் காணப்படுகின்றனர். இதனால், பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே செல்ல வேண்டியவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குமரி மாவட்டத்தில் வேலைக்குச் செல்பவர்கள் முகமூடி அணிந்தே செல்கின்றனர். இதனால், மாவட்டத்தில் முகமூடியின் தேவை அதிகரித்துள்ளது. எனவே, முகமூடிகளை விற்பனை செய்யும் மருந்து கடைகள் அதிரடியாக, அதன் விலையை உயர்த்தியதாக ஏராளமான புகார்கள் பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.

காவல் துறையினர் சோதனை

இந்நிலையில், குமரி மாவட்ட காவல் துறையினர், சுகாதாரத் துறையினர் மாவட்டத்தில் உள்ள மருந்து கடைகளில், மருந்து குடோன்களில் இன்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முகக்கவசம் அதிக விலைக்கு விற்கப்படுகிறதா? எனவும், குடோன்களில் முகக் கவசங்கள் பதுக்கப்பட்டுள்ளனவா? எனவும் ஆய்வு மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட முதலமைச்சர் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.