கன்னியாகுமரி: வரலாற்றுச் சிறப்பு மிகுந்த பழமையான கோயில்களில் சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலும் ஒன்று. இங்குப் பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளும் ஒருங்கே இணைந்து மூலவராகக் காட்சியளிக்கின்றனர். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மற்றும் மார்கழி மாதம் திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி அன்று, மார்கழித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளான மக்கள் மார் சந்திப்பு, பஞ்ச மூர்த்தி தரிசனமும், கைலாச பார்வதி தரிசனம் ஆகியவை சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில், மார்கழித் திருவிழா 9வது நாளான இன்று (ஜனவரி 5) முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனர். தமிழக தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மேயர் மகேஷ், விஜய் வசந்த் எம்பி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: Pradosham: அண்ணாமலையார் கோயில் நந்திக்கு மார்கழி பிரதோஷ சிறப்பு அபிஷேகம்!