கன்னியாகுமரி: தென் மாநில அளவில் பிரசித்திப்பெற்ற அல்போன்சா ஆலய திருவிழா ஆண்டு தோறும் ஜூலை மாதம் பத்து நாள்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழாவை முத்துக்குடை ஏந்தி பவனியாக வந்து தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வர் தாமஸ் பெளத்துப் பிறப்பில் கொடியேற்றி தொடங்கிவைத்தார்.
இந்த பத்து நாள் திருவிழாவிலும் புனித அல்போன்சா சிறப்பு நவநாளாகும். தினசரி மாலை ஆடம்பர கூட்டு திருப்பலி நற்கருணை ஆராதனை என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. பத்தாவது நாள் திருவிழாவில் மிகவும் பிரசித்திப்பெற்ற புனித அல்போன்சாவின் திருத்தேர் பவனி நிகழ்ச்சி நடைபெறும்.
அன்று தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வர் தலைமையில் அருட்பணியாளர்கள், அருட் சகோதரிகள், மற்றும் பல்வேறு பங்குகளில் உள்ள இறை மக்கள் புனித அல்போன்சா திருத்தலம் நோக்கி புனித பயணம் மேற்கொள்ளும் நிகழ்சியும் நடைபெறும். இன்று நடைபெற்ற திரு கொடியேற்றம் நிகழ்சியில் குமரி மாவட்டம் மட்டுமல்ல கேரளாவில் இருந்தும் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் வருகை தந்து ஆடம்பர கூட்டுத் திருப்பலியில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ஆடிபூரம் பிரம்மோற்சவம் கொடியேற்றம்