ETV Bharat / state

சுசீந்திரம் கோயில் மார்கழி திருவிழா நடத்த அனுமதி - கன்னியாகுமரி மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி: வரலாற்று சிறப்பு வாய்ந்த சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி திருவிழாவிற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

சுசீந்திரம் கோயில்
சுசீந்திரம் கோயில்
author img

By

Published : Dec 10, 2020, 4:44 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் மார்கழி பெருந்திருவிழா பிரசித்திப் பெற்றதாகும். இந்த விழா 10 நாட்கள் கொண்டாடப்படும். திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், மக்கள் மார் சந்திப்பு, சுவாமி வீதி உலா, கருடாழ்வார் தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். விமரிசையாக நடைபெறும் தேர் திருவிழா அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும்.

சுசீந்திரம் கோயில்
சுசீந்திரம் கோயில்

இந்த ஆண்டு வரும் டிசம்பர் 21ஆம் தேதி மார்கழி விழா தொடங்க வேண்டும். ஆனால் கரோனா பரவல் காரணமாக விழாவிற்கு தடைவிதிக்கபட்டிருந்தது. இந்நிலையில், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று மார்கழி தேர் திருவிழாவிற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் திருவிழாவிற்கான முன் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.