கரோனா தீநுண்மி தொற்று தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த நோய்த்தொற்றிலிருந்து தமிழ்நாட்டு மக்கள், உலக மக்கள் முற்றிலும் விடுபட வேண்டி இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கன்னியாகுமரி முக்கடல் சங்கம் 16 கால் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு பூஜைகளும், முக்கடல் சங்கமத்தில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தன.
இந்தப் பூஜையில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், குமரி மாவட்ட தேவசம் வாரியம் இணை ஆணையர் அன்புமணி, தேவசம் வாரியம் சேர்மன் சிவகுற்றாலம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.