கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தென்னிந்திய அளவில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கிடையிலான டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. இதற்கான விவரங்களை போட்டியின் ஒருங்கிணைப்பாளர்களான நாகர்கோவிலைச் சேர்ந்த லதா குமாரசுவாமியும் மற்றும் சென்னையை சேர்ந்த சிவகுமாரும் செய்திருந்தனர். இதையடுத்துச் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தனர்.
அதில் "தமிழ்நாடு, தெலங்கானா, அந்தமான் நிக்கோபர் தீவுகள், ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான இந்த டென்னிஸ் போட்டிகள் வரும் 19ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை, நாகர்கோவிலில் உள்ள பயோனியர் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெறவுள்ளது.
இதில், 17 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 19 வயதுக்குட்பட்டவர்கள் என இரு பிரிவின் கீழ் ஆண், பெண் என இரு பாலினருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்தப் போட்டிகளில் 170 பள்ளிகளைச் சேர்ந்த 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்.
மேலும், தமிழகத்தில் சென்னைக்கு வெளியே முதன் முறையாக நாகர்கோவிலில் நடைபெறும் இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்" எனவும் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.