ETV Bharat / state

அஞ்சுகிராமம் அருகே கரை ஒதுங்கிய சிவலிங்கங்கள்...!

கன்னியாகுமரி: அஞ்சுகிராமம் அருகே கரை ஒதுங்கிய சிவலிங்கங்களை காவல் துறையினர் மீட்டு கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தனர்.

Lingam
author img

By

Published : Sep 18, 2019, 12:16 PM IST

கன்னியாகுமரியை அடுத்த ரஸ்தாகாடு கடலில் எட்டு சிவலிங்கங்கள் கரை ஒதுங்கிக் கிடப்பதாக அப்பகுதி மீனவர்கள் அஞ்சுகிராமம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இந்தத் தகவலின் பேரில், அஞ்சுகிராமம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எபனேசர், கிராம நிர்வாக அலுவலர் வளர்மதி, காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கடலில் கரை ஒதுங்கிக் கிடந்த சிவலிங்கங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், இந்த சிவலிங்கங்கள் மரத்தினால் செய்யப்பட்டவை எனவும் அவை சுமார் ஒன்றரை அடி உயரமுள்ளதாகவும் தெரியவந்தது. பின்னர், இந்த லிங்கங்களை கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தனர்.

கன்னியாகுமரி அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்ட சிவலிங்கங்கள்

இந்த சிவலிங்கங்கள் ஏதேனும் கோயிலில் பூஜைக்கு வைக்கப்பட்டு பின்னர் கடலில் போடப்பட்டிருக்கலாம் என சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் தெரிவித்தனர்.

Intro:கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே கடற்கரையில் கரை ஒதுங்கிய சிவலிங்கத்தால் அப்பகுதியில் பரபரப்பு. கரை ஒதுங்கிய சிவலிங்கம் மீட்கப்பட்டு கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Body:கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே கடற்கரையில் கரை ஒதுங்கிய சிவலிங்கத்தால் அப்பகுதியில் பரபரப்பு. கரை ஒதுங்கிய சிவலிங்கம் மீட்கப்பட்டு கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கன்னியாகுமரியை அடுத்த ரஸ்தாகாடு கடலில் எட்டு சிவலிங்கங்கள் கரை ஒதுங்கிக் கிடப்பதாக அப்பகுதி மீனவர்கள் அஞ்சுகிராமம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் அஞ்சுகிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி வளர்மதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடலில் கரை ஒதுங்கி கிடந்த சிவலிங்கத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இந்த சிவலிங்கங்கள் மரத்தினால் செய்யப்பட்டவை எனவும் இவை சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள எனவும் தெரியவந்தது. இந்த சிவலிங்கங்கள் எங்கிருந்து வந்தது என்று விசாரணை நடத்திய அதிகாரிகள் எட்டு சிவலிங்கத்தையும் கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தனர். இந்த சிவலிங்கங்கள் ஏதேனும் கோவிலில் பூஜைக்கு வைக்கப்பட்டு பின்னர் கடலில் போடு இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.