ETV Bharat / state

ஆதாரங்களை அழித்த காசியின் தந்தை; கைதுசெய்த சிபிசிஐடி - கன்னியாகுமரி மாவட்ட செய்திகள்

thangapandian
thangapandian
author img

By

Published : Jun 30, 2020, 4:52 PM IST

Updated : Jun 30, 2020, 8:00 PM IST

16:46 June 30

கன்னியாகுமரி: மகனைக் காப்பாற்றும் நோக்கில் ஆதாரங்களை அழித்ததாகக் கூறி காசியின் தந்தை தங்கபாண்டியனை சிபிசிஐடி காவல் துறையினர் கைதுசெய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காசி. இவர் சமூக வலைதளங்கள் மூலம் இளம்பெண்களைத் தொடர்புகொண்டு காதலிப்பதுபோல் ஏமாற்றி, அவர்களோடு தனியாக இருப்பதை ஆபாச வீடியோக்கள் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இச்சூழலில் பாதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த இளம் பெண் மருத்துவர் அளித்த புகாரில் காசி கைதுசெய்யப்பட்டார்.  

இதனைத் தொடர்ந்து, நான்கு பெண்களும் ஒரு இளைஞரும் கொடுத்த புகாரில், ஒரு போக்சோ வழக்கு, 2 பாலியல் வழக்கு, ஒரு கந்துவட்டி வழக்கு உள்ளிட்ட ஆறு வழக்குகள் காசி மீது பதிவுசெய்யப்பட்டன. இதனிடையே காசி குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில், இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி காவல் துறையினர் காசியைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியதில்,  ஐந்து நாள்கள் சிறைக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.  

காசியின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட மடிக்கணினி, மெமரி கார்டு, மொபைல் போன் உள்ளிட்டவற்றை சைபர் கிரைம் காவல் துறை உதவியுடன் ஆய்வுசெய்துவருகின்றனர். ஆனால், அதிலிருந்த ஆதாரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நடத்தப்பட்ட சிபிசிஐடி விசாரணையில் ஆதாரங்களைக் காசியின் தந்தை தங்கபாண்டியன் அழித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, தனது மகனைக் காப்பாற்றும் நோக்கில் செயல்பட்ட தங்கபாண்டியனை சிபிசிஐடி காவல் துறையினர் இன்று கைதுசெய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. 

இதையும் படிங்க: வீட்டில் இருந்துகொண்டே டயாலிஸிஸ் செய்யலாம் - புதுகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாதனை.

Last Updated : Jun 30, 2020, 8:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.