ETV Bharat / state

இரிடியம் என்று பித்தளைக் குடத்தைக் காட்டி பல கோடி ரூபாய் மோசடி - இரிடியம்

கன்னியாகுமரி : ’சதுரங்க வேட்டை’ பட பாணியில் இரிடியம் எனக்கூறி பித்தளைக் குடத்தை காட்டி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நாகர்கோவிலை சேர்ந்த பிரபல ரவுடி பிரபு உட்பட 3 பேரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

இரிடியம் எனக்கூறி பித்தளை குடத்தை  காட்டி பல கோடி ரூபாய் மோசடி
author img

By

Published : Jun 19, 2019, 7:09 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த், ஓட்டல்,டேங்கர் லாரி வைத்து வீடுகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்து வருகிறார். இவர், டீக் கடையில் டீ குடித்துக் கொண்டிருக்கும்போது கண்ணன், பிரபு என்பவர்கள் அவரிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர். அவர்கள், இரிடியம் வாங்கி வீட்டில் வைத்தால் செல்வம் பெருகி தொழில் சிறக்கும் என்று அரவிந்திடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பி அரவிந்த் முதலில் ரூபாய் 25 ஆயிரம் கொடுத்துள்ளார், பின்னர் ஓட்டலுக்கு அழைத்து சென்று அவரிடம் ஒரு பித்தளைக் குடத்தைக் காண்பித்து உள்ளே இரிடியம் இருப்பதாகவும், கையை உள்ளே விட்டு பார்க்குமாறும் கூறியுள்ளனர். அரவிந்துக்கு ஒருவித அதிர்வு ஏற்பட்டதும், இரிடியம் இருப்பதாக நம்பியுள்ளார். உடனே, அவர்களிடம் அரவிந்த் குடத்தைக் கேட்க, இந்தக் குடம் வேறு ஒருவருக்கு, மீதி பணம் கொடுத்தால் அடுத்த குடம் உனக்கு எனக் கூறி மேலும் 25 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், சில நாட்கள் கழித்து அவர்களிடம் இரிடியம் கேட்டபோது, காரணம் சொல்லி காலம் தாழ்த்தியிருக்கிறார்கள். அதன்பிறகு அவர்களின் செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டதால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அரவிந்த், இதுகுறித்து அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன், அடிப்படையில் மூன்று தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கைது செய்தனர்.

இரிடியம் எனக்கூறி பித்தளை குடத்தை காட்டி பல கோடி ரூபாய் மோசடி

விசாரணையில், இவர்கள் குமுளியை சேர்ந்த நாகராஜன், நாகர்கோவிலை சேர்ந்த சதீஸ் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து இரிடியம் எனக்கூறி புத்தகத்தை காட்டி பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இவர்களிடமிருந்து 57 பவுன் தங்க நகைகள், 14 லட்சத்தி 25 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் வழிப்பறி கொள்ளையிலும் ஈடுபட்டது தெரியவந்ததுள்ளது. இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Intro:சதுரங்க வேட்டை படம் பாணியில் இரிடியம் எனக்கூறி பித்தளை குடத்தை காட்டி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நாகர்கோவிலை சேர்ந்த பிரபல ரவுடி பிரபு உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து செய்தனர். அவர்களிடம் இருந்து 57 பவுன் நகை மற்றும் 14 லட்சத்து 25ஆயிரம் ரூபாய் பறிமுதல்.

Body:சதுரங்க வேட்டை படம் பாணியில் இரிடியம் எனக்கூறி பித்தளை குடத்தை காட்டி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நாகர்கோவிலை சேர்ந்த பிரபல ரவுடி பிரபு உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து செய்தனர். அவர்களிடம் இருந்து 57 பவுன் நகை மற்றும் 14 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பறிமுதல். கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிநாத புரம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் இவர் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார் அதில் மேல கிருஷ்ணன் போது ஒரு பகுதியை சேர்ந்த பிரபு தனக்கு இரிடியம் விற்பதாகக் கூறி 50 ஆயிரம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக குறிப்பிட்டிருந்தார் அதன் அடிப்படையில் பிரபுவை தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்ததில் ஓட்டல் மற்றும் சொந்தமாக டேங்கர் லாரி வைத்து வீடுகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்து வரும் அரவிந்த் சம்பவத்தன்று அப்பகுதியில் டீ குடித்துக் கொண்டிருக்கும் போது இரண்டு பேர் அவரிடம் வந்து பேச்சுக் கொடுத்து இரிடியம் வாங்கி வீட்டில் வைத்தால் செல்வம் பெருகி தொழில் சிறக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார் இதை நம்பி தனக்கும் அந்த இருடியம் வேண்டும் என்று கூற அந்த இரண்டு நபர்கள் நாகர்கோவிலை அடுத்த மணிகட்டி பொட்டல் பகுதியை சேர்ந்த கண்ணன் பிரபு இடம் இருப்பதாகவும் அதற்கு முன் பணமாக இருபத்தைந்தாயிரம் கொடுக்க வேண்டும் என்றும் கூறினர் பின்னர் அரவிந்த் கண்ணன் பிரபுவிடம் நேரில் சந்தித்து முன்பணம் ரூபாய் 25 ஆயிரம் கொடுத்த பிறகு அஞ்சுகிராமம் அருகே உள்ள ஓட்டலுக்கு இரிடியம் மாதிரியே காட்டுவதாக கூறி அழைத்து சென்றனர் அவர்களுடன் நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த சதீஷ் கேரள மாநிலம் கும்மி வண்டி பெரியாரை சேர்ந்த நாகராஜன் ஆகியோரும் உடனிருந்தனர் இவர்கள் அரவிந்திடம் ஒரு பித்தளைக் இடத்தை காண்பித்து உள்ள இருடியம் இருப்பதாக கையை உள்ளே விட சொல்ல அரவிந்துக்கு ஒருவித அதிர்வு ஏற்பட்டு அவர் உள்ள இருடியம் இருப்பதாக நம்பினார் உடனே அவர்களிடம் அரவிந்த் குடத்தை கேட்க இந்த குடம் வேறு ஒருவருக்கு அடுத்த கூட உனக்கு எனக் கூறி மேலும் 25 ஆயிரம் ரூபாய் முன்னதாக பெற்றனர் பின்னர் அரவிந்து சில நாட்கள் கழித்து அவர்களிடம் கேட்ட போது ஏதாவது காரணம் சொல்லி காலம் தாழ்த்தி கடைசியில் செல்போனிலும் தொடர்பு கொள்ளாத நிலை நிலைக்கு சென்று விட்டனர் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அரவிந்த் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் செய்தார் இதனை தொடர்ந்து சிறப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் சாம்சன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை பிடித்து விசாரித்து வந்தனர் இவர்கள் குமுளியை சேர்ந்த நாகராஜன் மற்றும் நாகர்கோவிலை சேர்ந்த சதீஸ் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து இரிடியம் எனக்கூறி புத்தகத்தை காட்டி பல நபர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்தது இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் மூவரையும் கைது செய்தனர் இவர்கள் பல்வேறு வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது மேலும் அவரிடம் இருந்து 57 பவுன் தங்க நகைகள் மற்றும் 14 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது விசாரணையில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் அவர்களிடம் இருந்து வெளிவரலாம் என போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது இது போல் பல ஏமாற்று சமூக நடந்து வருவதால் பொதுமக்கள் இதனை இப்படி போன்ற பல மோசடிகளை நம்பி ஏமாற வேண்டாம் என காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.