கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து லாரிகள் மூலமாக அனுமதிக்கப்பட்ட ஜல்லி கற்கள், பாறை கற்கள், செம்மண் முதலியவைகள் அளவுக்கு அதிகமாக கொண்டு செல்லப்படுகின்றன.
இதனால் சாலைகள் பழுதாவதுடன் அடிக்கடி விபத்துகளும் நடைபெற்று வருகின்றன. இது குறித்து பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் உரிய அலுவலர்களிடம் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறி வந்தனர்.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் பண்டாரபுரம் வழியாக அளவிற்கு அதிகமாக ஜல்லி கற்கள் ஏற்றிச் சென்று கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
இதனை அறிந்த வட்டார போக்குவரத்து துறை அலுவலர்கள், லாரியை தடுத்து நிறுத்தினார்கள். மேலும் லாரியை பறிமுதல் செய்து நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவகத்திற்கு கொண்டு சென்றனர். இந்த நடவடிக்கை தொடரும் என வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
அளவிற்கு அதிகமாக ஜல்லி கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
கன்னியாகுமரி: பண்டாரபுரம் அருகே அளவிற்கு அதிகமாக ஜல்லி கற்களை ஏற்றி வந்த லாரியை வட்டாரப் போக்குவரத்து துறை அலுவலர்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.