சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில், கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை, முக்கடல் சங்கமம் பிரசித்திப்பெற்ற பகவதி அம்மன் கோவில் இவை அனைத்தும் புகழ் பெற்றவை ஆகும். கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் பெரும்பாலான பயணிகள் படகு வழியாக விவேகானந்தர் பாறைக்குச் சென்று ரசிப்பது வழக்கம்.
இந்நிலையில் விவேகானந்தர் பாறைக்கு செல்வதற்கான படகு சவாரி நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் டிக்கெட் எடுத்து படகு சவாரி செய்யக் காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூறுகையில், கடல்நீர் திடீரென உள்வாங்கியதால்தான் படகு சவாரி உடனடியாக ரத்து செய்யப்பட்டது. மீண்டும் கடல்நீர் மட்டம் சீரானதும் படகு சாவரி தொடங்கப்படும் என்றனர்.