சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சீசன் நேற்று தொடங்கி, வரும் 2020 ஜனவரி மாதம் 17ஆம் தேதி வரை 60 நாட்கள் நடைபெறுகிறது. இந்த சீசனில் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வருகை தருகின்றனர்.
இங்கு வருகை தரும் ஐயப்ப பக்தர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடி பகவதியம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். இதையொட்டி, பக்தர்கள் பாதுகாப்பாக கடலில் குளிக்கும் வகையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் திரிவேணி சங்கமத்தில் 210 மீட்டா் தொலைவுக்கு பாதுகாப்பு மிதவை அமைக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் இந்த மிதவையைக் கடந்து சென்று குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது. இங்கு காவல் துறையினர் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பக்தா்களின் வசதிக்காக தற்காலிக கழிப்பறைகள், குடிநீா் வசதி, கண்காணிப்புக் கேமரா, புறக்காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: சபரிமலை அய்யப்பனுக்கு மாலை அணிய சுருளி அருவியில் குவிந்த பக்தர்கள்!