கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை, நாகர்கோவில் தன்னார்வ சுழற்சங்கம், தனியார் கல்லூரி ஆகியவை இணைந்து மாறாமலை வனப்பகுதிகளில் வனப்பாதுகாப்பு விழிப்புணர்வு சுற்றுலா பயணத்திற்கு என்சிசி மாணவ, மாணவிகளை அழைத்துச் சென்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அழிந்து வரும் வனத்தையும், வன விலங்குகளையும் பாதுகாப்பது சம்பந்தமான இலக்குடன் இந்த விழிப்புணர்வு மலைப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட என்சிசி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், தனியார் சங்க நிர்வாகிகள் மற்றும் வனத்துறையினர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, இந்தக் குழுவினர் மாறாமலை காட்டுப் பகுதிகளில் சென்று ஆய்வு செய்து, பின்னர் நகரப்பகுதிகளில் பொது மக்கள் மத்தியில் வனப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்சிகளை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
மேலும் நாகர்கோவிலில் வனத்துறை அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த வன மற்றும் வன விலங்குகள் விழிப்புணர்வு சுற்றுலாப் பயணத்தை மாவட்ட வனத்துறை அதிகாரி ஆனந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தூய்மை பாரதம் பணியில் ஈடுபட்ட பி.எஸ்.எஃப். படையினரின் நாய்கள்!