கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இடலாக்குடியில் சதாவதானி செய்குதம்பி பாவலர் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கிவருகிறது. இந்தப் பள்ளியில் பன்னிரென்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு, தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றிய சுரேஷ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அந்த மாணவி பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பள்ளியில் திரண்டு அந்த ஆசிரியரைப் பிடித்து அடிஉதை கொடுத்தனர். பின்னர் காவல் துறையினரிடம் அந்த ஆசிரியரை ஒப்படைக்கும்போதும், மக்கள் அவரை சரமாரியாகத் தாக்கினர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து ஆசிரியரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகிறார்கள்.
இதையும் படிங்க: ஆசிரியர் தாக்கி மாணவன் கை எலும்பு முறிவு!