கன்னியாகுமரியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதனால் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன நிலையில் பொதுமக்கள் அன்றாட உணவு பொருள்கள் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தினக்கூலி தொழிலாளர்கள் வருமானம் இல்லாமல் அரிசி, காய்கறி, மளிகை பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வாங்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இவர்கள் ஒருவேளை உண்ண உணவுக்கூட கிடைக்காமல் பட்டினியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் அழகப்பபுரம் பகுதியில் உள்ள புனித அந்தோணியார் தொடக்கப் பள்ளியில் பயிலும் பள்ளி மாணவ-மாணவிகள் 144 தடை உத்தரவு காரணமாக உணவு, அத்தியாவசிய பொருள்கள் கிடைக்காமல் தவித்துவந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பள்ளியின் தாளாளர் அருட்தந்தை நெல்சன் பால்ராஜ் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரிசி, காய்கறிகள், பழங்கள், உணவு பொருள்களை வழங்கினார். மாணவ-மாணவிகள் சார்பில் அவர்களது பெற்றோர்கள் பொருள்களைப் பெற்றுக்கொண்டு அருட்தந்தைக்கு நன்றி கூறினர்.
இதையும் படிங்க... ஊரடங்கால் பள்ளியில் வாடும் செடிகள்: தாமாக முன் வந்து நீர் பாய்ச்சும் ஆசிரியர்கள்