கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு அரசு ஒதுக்கீடு செய்யும் தொகை முறையாக செலவிடப்படாமல் ஊழல் நடந்து வருவதாக மனித உரிமை பாதுகாப்பு கழகத்தினர் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், "கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு முறையாக உணவு வழங்கப் படுவதில்லை. நோயாளிகள் கீழ்த்தரமாக நடத்தப்படுகின்றனர். அவர்கள் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு ஒவ்வொரு நோயாளிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் தொகையை முறையாக செலவழிக்கப்படாமல் ஊழல் நடைபெறுகிறது. அரசு நோயாளிகளுக்காக ஒதுக்கீடு செய்துள்ள பணம் முழுமையாக நோயாளிகளை சென்றடையவில்லை.
எனவே கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் தொகையை முறைகேடு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஒதுக்கீடு செய்யும் அனைத்தும் நோயாளிகளுக்கு முறையாக சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: சீமானை கைது செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!