குமரி மாவட்டத்தில் பழமை வாய்ந்த நாகர்கோவில் கோட்டாறு 'கேட்ட வரம் தரும் புனித சவேரியார்' பேராலயத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனையொட்டி நேற்று மாலை நடந்த திருப்பலியை அடுத்து கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து நடைபெறும் இத்திருவிழாவின் எட்டாவது தினத்தில் தேர் பவனி நடைபெறும்.
கோவில்பட்டியில் சித்தியை கட்டையால் அடித்து கொன்ற இளைஞர் கைது!
பத்தாவது நாளான டிசம்பர் 10ஆம் தேதி அன்று காலை கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசேரன் சூசை தலைமையில் சிறப்பு திருப்பலியும், அதனையடுத்து தேர் பவனியும் நடைபெறும்.
இவ்விழாவில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.