கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதில், மருத்துவமனையில் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டப் பணிகள் குறித்து விசாரித்தார். மருத்துவமனை வளாகம், நோயாளிகள் அறை, உறவினர் ஒய்வறை உள்ளிட்டவைகளின் தூய்மை குறித்து மருத்துவமனை நிர்வாகிகள், பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
அதைத்தொடரந்து மருத்துவர்களுடன் கலந்துரையாடிய அவர், தூய்மை இந்தியா திட்டத்தின் அடிப்படையில் மருத்துவமனைகளின் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து அரசுக்கு மாவட்ட ரீதியான அட்டவணை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்தார். மேலும் சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமி இந்த ஆய்வில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'அதிமுக ஆட்சிக் காலத்தில் கடன் சுமை அதிகம்' - கனிமொழி குற்றச்சாட்டு