ETV Bharat / state

அய்யா வைகுண்டசாமி தலைமைபதியில் வைகாசி பெருவிழா - திராளான பக்தர்கள் பங்கேற்பு

நாகர்கோவில்: சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அய்யாவைகுண்டசாமி தலைமைப்பதி
author img

By

Published : May 24, 2019, 10:52 AM IST

கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த வருடம் வைகாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருகொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு முத்திரி படுதலும், அதனைத் தொடர்ந்து காலை ஆறு மணிக்கு திருநடை திறந்து திருவிளக்கு ஏற்றுதல் பணிவிடையும், 6.30 மணிக்கு கொடியேற்றமும் நடைபெற்றது.

அய்யாவைகுண்டசாமி தலைமைபதியில் வைகாசி பெருவிழா

திருக்கொடியை பாலபிரஜாபதி அடிகளார் ஏற்றிவைத்தார். இதில் நெல்லை, தூத்துக்குடி, குமரி, அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் .

Intro:கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது நெல்லை தூத்துக்குடி குமரி திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Body:கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது நெல்லை தூத்துக்குடி குமரி திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி அமைந்துள்ளது. இங்கு வருடம் தோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் வைகாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. திரு கொடியேற்ற நிகழ்ச்சி முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி படுதலும் தொடர்ந்து திருநடை திறந்து திருவிளக்கு ஏற்றுதல் காலை 6 மணிக்கு பணிவிடையும் தொடர்ந்து கொடிப்பட்டம் தயாரிப்பு நிகழ்ச்சியும் காலை 6.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது .காவியுடை அணிந்து தலைப்பாகை அணிந்த பக்தர்களின் அய்யா சிவசிவா அரகரா அரகரா என்ற பக்தி கோசத்திற்கு இடையே பாலபிரஜாபதி அடிகளார் திருக்கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் நெல்லை ,தூத்துக்குடி, குமரி மாவட்டம் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் .இன்று இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் திருவீதி பவனி நடைபெறுகிறது விழா தொடர்ந்து 11நாட்கள் நடைபெறுகிறது .விழா நாட்களில் தினமும் காலை மாலை பணிவிடையும் இரவு வாகன பவனியும் நடைபெறுகிறது 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை 8 திருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை 4மணிக்கு வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி கிணற்றங்கரையில் கறிவிடட நிகழ்ச்சியும் நடைபெறுகிறது .அடுத்த மாதம் மூன்றாம் தேதி திங்கள்கிழமை பதினொராம் திருவிழா நடைபெறுகிறது. அன்று பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் காலை மாலை பணிவிடையும் இரவு வாகன பவனியும் அன்னதர்மமும் கலையரங்கில் ஆன்மீக கலைநிகழ்ச்சிகழும் நடைபெறுகிறது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.