ETV Bharat / state

களைக்கட்டிய வைகாசி பெருந்திருவிழாவின் தேரோட்ட நிகழ்ச்சி! - கன்னியாகுமரி

கன்னியாகுமரி: சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி பெருந்திருவிழாவில் தேரோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

தேரோட்ட நிகழ்ச்சி
author img

By

Published : Jun 5, 2019, 12:07 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி பெருந்திருவிழா மே 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் 11ஆம் நாளான இன்று தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பகல் 11 மணிக்கு தலைமைப்பதி பள்ளியறையிலிருந்து அய்யா வைகுண்டசாமியை பல்லாக்கு வாகனத்தில் எழுந்தருளுச் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பகல் 12 மணிக்கு தேரோட்டம் துவங்கியது.

தேரோட்ட நிகழ்ச்சி

இதில் நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்கள், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Intro:கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி பெருந்திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Body:கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி பெருந்திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி பெருந்திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி பெருந்திருவிழா கடந்த மாதம் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்றது. பதினொன்றாம் திருவிழாவான இன்று தேரோட்டம் நடைபெற்றது .தேரோட்டம் நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு முத்திரிபதமிடும் நிகழ்ச்சியும் தொடர்ந்து திரு நடை திறந்தலும் காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை நடைபெற்றது. பகல் 11 மணிக்கு தலைமைப்பதி பள்ளியறையிலிருந்து அய்யா பல்லாக்கு வாகனத்தில் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா கொலுவீற்றிருக்க பகல் 12 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. காவி உடை அணிந்து தலைப்பாகை அணிந்த அய்யாவழி பக்தர்கள் அய்யா சிவசிவா அரகரா அரகரா என்ற பக்தி கோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முத்து குடைகள் முன்செல்ல திருத்தேர் கீழரத வீதி, தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி, வழியாக வடக்கு ரதவீதியில் தலைமைபதியின் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது. அங்கு பக்தர்கள் தேங்காய், பழம், பூ ,பன்னீர் ஆகிய பொருட்களை சுருள் படைத்து வழிபட்டனர். தேரோட்ட நிகழ்ச்சியில் பல மாவட்டங்களை சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சாமிதோப்பு தேரோட்டத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்ட போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது .கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.